Friday, February 13, 2009

மனசாட்சி.....11

என்னப்பா நாம எல்லாம் இருக்கோம் என்றாவது நினைச்சியா...இப்ப இப்படி அநியாயமாக சாகடிச்சிட்டியே......நீ நல்லாவா இருப்ப...

ஏன்டா மாயாவி உனக்கு என்ன பைத்தியமா பெத்த பிள்ளையை யாராச்சும் பணத்திற்காக அடைகு வைப்பாங்களா...? இப்ப அவன் ஆத்தா செத்துப்போய்கிடக்கு கடைசியா ஒரு தடவை தாய்ன்ர முகம் பார்க்கவேண்டாமா...சொல்லுப்பா...

இவன் ஒரே குடிதான்....அந்த ஒத்தபிள்ள கோபாலுவைவேறு அனுப்பிவச்சிட்டு அவங்க கொடுத்த காசில அன்னைக்கு ராத்திரி பூரா ஒரே குடிதான்......குடிச்சட்டு கம்முண்ணு கிடந்தானா....மத்தவங்களையும் தூங்க விடாம ஒரே ரகள...(கதை கட்டி ஊரை நம்ம வைக்கும் கூட்டத்தில் இவளும் ஒருத்தி..)

இவன் பணத்திற்காக எதைவேணுமானாலும் செய்யக்கூடிய ஆளப்பா..இந்தஏரியாவில நல்ல மனுசனாட்டம் நடமாடிட்டு இப்பதான் உண்மைதெரியுது....

ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுக்கொண்டு இருந்தார்கள்.....மங்காவிற்கு டொக்டரின் ஆலோசனைப்படி ஊசி மருந்துகள் கொடுத்தும் அவை வேலைசெய்யவில்லை. தாமதாக உசிமருந்து கிடைத்தபடியால அவள் இறைவனடி சேர்ந்தாள்.

நோய்வாய்ப்பட்டமையால் இயற்கை மரணம் என மரண அத்தாட்சிப்பத்திரம் எழுதியபின்பு உடனே அடக்கம் செய்யவும் ஏற்பாடு நடைபெற்றது.....

ஏதோ காரியம் ஆனால் சரி என்பது போல அயலவர்கள் கூடிநின்று மங்காவின் உடல் புதைக்கப்ட்டது.

யாருமே மாயாவிக்கு ஆறுதல் கூறக்கூட கிட்டப்போகவில்லை. தனிமையில் புழுவாய் துடித்தான்.

வெளிப்பார்வையின் கண்களுக்கு தெரிந்ததெல்லாம்....மாயாவி ஒரு மனசாட்சியில்லாத மிருகம். பணத்திற்காக பெற்ற பிள்ளையைக்கூட அடைகுவைப்பவன். ஈவிரக்கமில்லாத அரக்கன். வெறிகாரன், மனைவி மக்களை காப்பாற்றத்தெரியாதவன்.

ஆண்டவன் ஒருவனைத்தவிர அவன் பணத்திற்காக பட்ட துன்பம் அந்த ஏழை பட்டபாடு, இலவச மருத்துவம் என்ற பெயரில் அங்குள்ள மருந்துகளை பணத்திற்கு விற்பது..அதனால் மாயாவி போன்ற ஏழை நோயாளர்கள் பாதிக்கப்பட்டது இவையாவுமே தற்போது அவனையும், ஆண்டவனையும் தவிர வேறுயாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

மாயாவியிடம் எல்லோரும் கேட்டுப்பார்த்தார்கள் எங்கதான் உன் மகனை அனுப்பிவச்சாய் சொல்லுப்பா நாம போய் கூட்டிவந்து கடைசியா தாயின் முகத்தை பார்க்கட்டும் என்று...

யாருடைய கேள்விகளுக்கும் பதில் கூறவில்லை. அவன் மெளனமாகயிருந்தான்....அப்ப கூட ஒரு முதியவர் அடிச்சுக்கலைக்கவேணும் இந்த நாய என்றார்....

அவனுக்கு மட்டும் தெரிந்தது....

கண்ணை விரலால் கீழே அழுத்தி லைட் அடித்துப் பார்த்த டாக்டர்.....

ம்....சொறி மாயாவி....உங்க வைப் மங்காவிற்கு ரொம்ப பாட் கெண்டிஷன். பள்ஸ் குறைஞ்சுகொண்டே போகுது....இன்னைக்கு நைட் 12 மணிக்கு மேல அவங்க உயிரோடு இருந்தாங்க என்றால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க...கண்ணில பார்த்தேன்...பிழைக்கிறதிற்கு நோ சான்ஸ்......வெரி சொறி....இன்னும் 6 மணித்தியாலம் இருக்கு. இனி அவங்களால பேசவும் முடியாது.....முடிஞ்சா உங்க பையனை கூட்டி வாங்க....ஆனா..........நீங்க போகாகதீங்க வேறு யாரையும் அனப்பிவையுங்க...........எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.முடிஞ்சவரையில பக்கத்தில இருங்க.....டேக் கெயார்.

மனம் படும் வேதனையில் கண்ணீர் அருவிபோல ஓட அவன் யாரை உதவிக்கு கூப்பிடுவது...???

வீட்டிற்குக்குள் ஓடிப்போய் ஈஸ்வரன் கொடுத்த அட்ரசை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு அவன் இருக்கும் ஏரியாவில் நல்ல நண்பரான பாண்டியண்ணனிடம் கொடுத்து விசயத்தை சொல்லுகிறான்...அவரோ......

இனி எல்லாம் ஆகாது மாயாவி. அவன் இனி வரும் வரையில் ஐஸ்ரூமில வைச்சிருக்க எல்லாம்..அல்லது வீட்டிலதான் 2 நாள் வச்சிருக்கக்கூட முடியாது. பணம்தான் அதிகம் செலவாகும். நான் இன்னைக்கு கொழும்பு போகிறன். வர ஒரு கிழமையாகும். முடிஞ்சா பையனை கூட்டி வர ஒழுங்கு செய்யிறன். ஆனா அவன் வந்தாலும் உன்கூட ஒட்டமாட்டான்.....உன்னில சரியான கோபமாகத்தான் இருப்பான்....ஆண்டவன் இருக்கான் நீ யாரைப்பற்றியும் கவலைப்படாதே.......ஆகவேண்டியது நிறைய இருக்கு...இந்தாப்பா இதில 2000. ரூபாயிருக்கு செலவிற்கு வச்சுக்கோ...

ம்.பணம்..பணம்.....இந்த பாழாய்ப்போன பணம் இப்ப என் கையில இறந்த உடலுக்கு கிடைக்கிற பணம் அப்ப நான் கதறினேனே......கிடைச்சுதா..அப்பவே கிடைச்சிருந்தா என் மங்கா என்னைவிட்டு போயிருப்பாளா.இல்ல என் மகனைத்தான் நான் அனுப்பிவச்சிருப்பனா...?

சரி...சரி மனசை தேற்றிக்கொள்......நடந்ததை நினைச்சு இனி வருத்தப்பட்டு என்ன பிரையோசனம்...எனக்கு நேரமாகுது நான் வாறன்.

வெறும் வார்த்தைகளால் அலங்கரித்துவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு விடைபெற்றார் பாண்டியன்.

யாருக்குத்தெரியும் இந்த உண்மை..?

அவனையும், அந்த அண்ணனையும் தவிர வேறுயாருக்கும் தெரியவாயப்பில்லை. மீண்டும் கூடியிருந்து வாய்க்கு வந்தபடி திட்டுக்களும், பேச்சுகளும் ஏராளம்.

மனம் நொந்து அழுதான்...இரவிரவாக அழுதான்.ஐயோ.ஐயோ எனக்கதறினான்.தனிமையில் வெந்தான்......யாருமற்ற அனாதைபோல உணர்ந்தான்....தான் செய்த தவறு என்ன என்று தனனைத்தானே கேட்டு நொந்துகொண்டான்.....எல்லாமே முடிந்துபோன கதை...

நாட்கள் நகர்ந்துகொண்டன....பல நாட்கள் மூடியிருந்த அவன் சயிக்கிள் கடை மீண்டும் திறந்தது. அவன் இப்போது பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தோடு செயல்பட்டான். எதற்காக ஏன்...?

பொறுத்திருங்கள் தொடரும்...

--------------------
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8715&hl=
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: